சர்க்கரை வள்ளிக்கிழங்கு பர்ஃபி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1 கப்

பால் - 1/2 கப்

சர்க்கரை - 1/2 கப்

வெனிலா எஸன்ஸ் - சில துளிகள்

நெய் - 3 மேஜைக்கரண்டி

ஃபுட் கலர் - சிறிது

செய்முறை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

இத்துடன் பால், சர்க்கரை சேர்த்து அடுப்பில் ஒரு நான்-ஸ்டிக் கலந்து கிளறவும்.

விரும்பினால் ஃபுட் கலர் சேர்க்கவும்.

கலவை கெட்டியானதும் நெய் மற்றும் எஸன்ஸ் சேர்த்து கிளறவும்.

அல்வா பதம் தாண்டி சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

நெய் தடவிய பாத்திரத்தில் பரப்பி அழுத்து விடவும். மேலே முந்திரி, பாதாம் என விருப்பம் போல் அலங்கரிக்கலாம்.

ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: