சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஜாமூன்
0
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
கோவா - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் அல்லது டால்டா அல்லது எண்ணெய் - பொரிக்க
ரோஸ் எஸென்ஸ் - சில துளிகள்
செய்முறை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சர்க்கரையை அடுப்பில் வைத்து சர்க்கரை உருகி கொதித்ததும் (கம்பிப்பாகு வரும் முன்பே) இறக்கி வைக்கவும்.
ரோஸ் எஸென்ஸ் சேர்க்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது டால்டா விட்டு காய்ந்ததும், உருட்டிய கிழங்கைப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். ஊறியதும் பரிமாறவும்.