சர்க்கரை பொங்கல் (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பாசி பருப்பு - 1/4 கப்

துருவிய வெல்லம் - 1 கப்

நசுக்கிய ஏலக்காய் - 4

காய்ச்சிய பால் - 1 கப்

நெய் - 1/2 கப்

முந்திரி - 10

உலர்ந்த திராட்சை - 10

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் விட்டு பாசி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். உடன் பச்சரிசியை போட்டு ஒரு வதக்கு வதக்கி உடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் குறைந்து கொண்டே வரும் கொதிக்க வைத்த தண்ணீர் வைத்திருந்தால் குறைய குறைய் தண்ணீர் சேர்க்கலாம் அரிசி வேகும் வரை.

வேறு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கையால் தண்ணீர் தெளித்து காய்ச்சவும். தூசிகள் இருந்தால் வந்து விடும். சூடு படுத்தினாலே போதும்.

அரிசி வெந்த சமையத்தில் ஏலக்காய்,காய்ச்சிய பால், 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

நன்றாக குழைந்து வெந்து வரும். அப்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை போட்டு கிளறி மீதியுள்ள நெய் ஊற்றி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: