சப்போட்டா கொழுக்கட்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/4 கிலோ

வெல்லம் - 100 கிராம்

சப்போட்டா - 4

தேங்காய் - 1/2 மூடி

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:

தேங்காயை துருவிக் கொள்ளவும். சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து சல்லடையால் சலிக்கவும்.

வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும்.

அரைத்த சப்போட்டா விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும், உலர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கிளறி, கெட்டியானதும் இறக்கி நன்றாகப் பிசையவும்.

இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து, சப்போட்டா உருண்டைகளை வைத்து மூடி இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: