கோஸ் பாயசம்
0
தேவையான பொருட்கள்:
கோஸ் - 1/4 கிலோ
பால் - 3 கப்
சீனி - 3/4 கப்
ஏலக்காய் - 5
முந்திரி - சிறிது
பாதாம் - சிறிது
பிஸ்தா - சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கோஸை பொடி பொடியாக நறுக்கி கழுவி அதில் போட்டு வேக வைக்கவும்.
கோஸ் நன்றாக வெந்தவுடன் அதில் சீனி சேர்த்து கரைந்தவுடன் ஏலக்காய், முந்திரி, பாதாம், பிஸ்தா பொடி பொடியாக நறுக்கி போட்டு கிளறவும்.
அதனுடன் பாலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.