கோதுமை ரவை ஸ்வீட்
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 100 கிராம்
பயத்தம் பருப்பு - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
பால் - 2 கப்
வெல்லம் - 1 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை:
கோதுமை ரவையை சுத்த செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கி வைக்கவும்.
குக்கரில் கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் போட்டு பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக விடவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும். வெந்ததும் இறக்கி வைத்து குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை 15 நிமிடம் கிளறவும்.
வாணலியில் வெல்லத்தை போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரையை விடவும்.
கோதுமை கலவை கெட்டியானதும் அதை ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்திற்கு மாற்றி அல்லது அதே பாத்திரத்தில் வைத்து கிளறவும். அதில் கரைத்து வைத்திருக்கும் வெல்லக்கரைசலை ஊற்றி மீண்டும் கிளறி விடவும்.
கோதுமைகலவை மற்றும் வெல்லக்கரைசல் ஒன்றாக கலந்ததும் அதில் 2 மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
பிறகு நெய்யில் முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அதில் சேர்த்து கிளறி விடவும்.
கோதுமைகலவை பாத்திரத்தில் நன்கு ஒட்டாமல் கேசரி பதத்திற்கு திரண்டு வரும் பொழுது இறக்கி வைத்து பரிமாறவும்.