கோதுமை ரவை பாயசம்
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1/2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
பால் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
முந்திரி பருப்பு நறுக்கினது - 1 மேசைக்கரண்டி
திராட்சை - 1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ப்ரஷர் பானில் ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு, கோதுமை ரவையை மணம் வர வறுக்கவும்.
அதிலேயே 2 கப் தண்ணீர் விட்டு, 2 விசில் வரும் வரை வேக விடவும்.
திறந்ததும் பாலைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
சர்க்கரை சேர்த்து அடுப்பின் தீயைக் குறைத்து, சர்க்கரை கரைந்ததும் இறக்கி, ஏலப்பொடி போட்டு, நெய்யில், முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும்.
மாறுதலாக இதை வெல்லம் போட்டும் செய்யலாம். அடுப்பில் ஒரு கப் பொடித்த வெல்லத்தை அரைக் கப் தண்ணீரில் நன்கு கரைய விடவும்.
நன்றாக 5 நிமிடங்கள் பாகு கொதிக்கட்டும். பிறகு குக்கரைத் திறந்ததும், பாகை அதில் வடிகட்டி விடவும். மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
இறக்கி வைத்ததும் தேவையான பாலை விட்டு நன்றாகக் கிளறி விடவும்.
ஏலப்பொடி போட்டு, நெய்யில், முந்திரி, திராட்சை வறுத்துப் போட்டு பரிமாறவும்.