கோதுமை ரவை கேசரி (2)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
கோவா - 1/4 கப்
பாதாம் - 10
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பாதாம் பருப்பை கொதி தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து தோல் நீக்கி மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யைக் காய வைத்து கோதுமை ரவையை சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
அதில் 3 கப் கொதிக்கும் தண்ணீரை சேர்க்கவும். 5 நிமிடங்கள் பெரிய தீயில் வைத்து ரவை வெந்ததும் மூடி போட்டு சிறு தீயில் நன்கு வேக விடவும்.
அதன் பின்னர் சர்க்கரை, கோவா சேர்த்துக் கிளறவும்.
கலவை இளகி மீண்டும் இறுகும் போது பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.