கோதுமை மாவு பால் போளி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கிலோ

நெய் - 1/4 லிட்டர்

பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை - 200 கிராம்

ஏலக்காய் - 4

செய்முறை:

கோதுமை மாவை சிறிது நெய், சிறிது வெந்நீர் விட்டு, பூரி மாவு போல் பிசையவும்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தேய்த்து வைக்கவும்.

பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொஞ்சம் கெட்டியாக வரும் வரை காய்ச்சவும்.

பால் காய்ந்து கொண்டிருக்கும் போதே, வேறொரு அடுப்பில் வாணலியில் நெய் ஊற்றி, தேய்த்த பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுத்து, பாலில் போடவும்.

எல்லாவற்றையும் போட்ட பிறகு, அடுப்பை நிறுத்தி இறக்கவும். நன்கு ஊறிய பிறகு பரிமாறவும்.

குறிப்புகள்: