கோதுமை மாவு குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
பால் - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
சீனி (சர்க்கரை) - 1/2 கப்
கோதுமைமா (மைதாமா) - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - 1/2 கப்
வறுத்த கஜூ (முந்திரி பருப்பு) - 10
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து ரவையை லேசாக வறுக்கவும். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையை போடவும்.
பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) கோதுமைமாவு(மைதாமா), பால், தண்ணீர், சீனி(சர்க்கரை) ஆகியவற்றை போட்டு நன்றாக அடித்து கரைக்கவும்.
கரைத்த பின்பு ரவை போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில் இக்கலவையை ஊற்றி இதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பூ, வறுத்த கயூ(முந்திரி பருப்பு) ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்பு அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அதில் இக்கலவையை ஊற்றி அதனுடன் எண்ணெய் ஊற்றி நன்றாக வேகவிடவும்.
வெந்தபின்பு சுவையான சத்தான கோதுமைமா குழிப்பணியாரம் தயாராகிவிடும்.