கோதுமை பாயாசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உடைத்த கோதுமை - 1 கப்

வெல்லம் - இரண்டு அச்சு

தேங்காய் துருவல் - 1 கப்

பால் - 1 1/2 லிட்டர்

பாதாம் - 20

பிஸ்தா - சிறிது

கிஸ்மிஸ் - சிறிது

ஏலக்காய் - ஏழு

நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய்ச்சவும்.

வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

கோதுமையை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும. ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை வைக்கலாம்.

வேக வைத்த கோதுமையை கொதிக்கும் பாலில் போட்டு நன்கு கொதிக்க விடவும். பால் ஒரு லிட்டராகும் வரை கொதிக்க விடவும்.

பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் துருவிய தேங்காயை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.

பின் அதில் பாதாம், பிஸ்தா சேர்த்து வறுக்கவும். சிவந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கிஸ்மிஸை போட்டு வறுக்கவும்.

கொதிக்கும் கோதுமை கலவையில் வெல்லத்தை ஊற்றி கலந்து ஐந்து நிமிடம் கொதித்ததும் வறுத்த தேங்காய், பாதாமை போட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: