கோதுமை கேசரி
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
சீனி - 3/4 கப்
அண்டி பருப்பு - 5
பாதாம் பருப்பு - 5
கிஸ்மிஸ் பழம் - 5
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
சூடான தண்ணீர் - 2 1/2 கப்
செய்முறை:
அண்டி பருப்பை சிறுசிறுத் துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். அதைப் போல் பாதாம் பருப்பை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையான பொருட்களை தயாராக
ஒரு தவாவில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி அதை சூடுபடுத்திக் கொள்ளவும்.
தவா சூடானதும் அதில் கோதுமைரவையை போட்டு 2 நிமிடம் வாசம் வரும் வரை வறுக்கவும்.
வறுத்த கோதுமைரவையிலிருந்து வாசம் வரும் போது அதில் 2 கப் சூடான தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் ஊற்றிய பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை வேக விடவும்.
ஏலக்காயை ஒரு சிறிய உரலில் அல்லது அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.
கோதுமைரவை நன்கு வெந்தவுடன் அதனுடன் சீனியை சேர்த்து ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
சீனி சேர்த்து கிளறிய பின்னர், அதில் மேலும் 1/2 கப் சூடான தண்ணீரை ஊற்றி கிளறி விடவும்.
மேலே ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
கோதுமைரவை கலவை நன்றாக வெந்து அதில் இருந்து நெய் வெளியே வர ஆரம்பிக்கும் போது ஏலக்காய்தூள் போட்டு இறக்கி வைத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் அல்லது சிறிய வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் உடைத்து வைத்திருக்கும் அண்டிபருப்பு, கிஸ்மிஸ் பழம், பாதாம் பருப்பு ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்திருக்கும் அண்டிபருப்பு, கிஸ்மிஸ், பாதாம் பருப்பை கேசரியில் போட்டு கிளறி விடவும்.
சூடாக இருக்கும் போதே இதனை பரிமாறவும்.