கோதுமை களி
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1/2 கப்
நெய் - 1/2 கப்
வாழைப்பழம் - பெரியது 1 அல்லது சிறியது 2
செய்முறை:
தேவையானப் பொருட்களில் உள்ள நெய்யில் பாதியை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாதி நெய் மற்றும் மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்றாக பிசைந்து சுமார் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து மீதம் உள்ள நெய்யை ஊற்றி அதனுடன் ஊற வைத்த கலவையும் சேர்த்து கைவிடாமல் நன்றாகக் கிளற வேண்டும்.
கலவையில் இருந்து நெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.