கோகனட் ஜெல்லி புட்டிங்
0
தேவையான பொருட்கள்:
மணமில்லாத ஜெல்லி பவுடர் (non flavoured jelly powder) - 15 கிராம்
கெட்டி தேங்காய் பால் - 700 மில்லி
குல மேரா(gula merah) எனப்படும் தென்னை வெல்லம் - 200 கிராம்
செய்முறை:
குலா மேராவை பொடித்து தேங்காய் பாலில் கரைத்து வடி கட்டவும்.
இதனுடன் ஜெல்லி பவுடரை கலந்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
பவுடர் கரைந்து தேங்காய் பாலும் சூடானதும் ஜெல்லி மோல்டில் ஊற்றி ஆற விடவும் .
ஜெல்லி நன்றாக செட் ஆனதும் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.