கைகுத்தல் அவல் கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அவல் - 1 கப்

சீனி - 1 கப்

கொதிக்கும் தண்ணீர் - 1/2 கப்

முந்திரி - 20

காய்ந்த திராட்சை - 10

நெய் - 1/2 கப்

கேசரி பவுடர் - 1/4 தேக்கரண்டி

ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

அவலைக் கழுவி சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் முந்திரி, காய்ந்த திராட்சையை போட்டு 2 நிமிடங்கள் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் அவலைக் கொட்டி நன்றாக ஒரு நிமிடம் கிண்டவும்.

கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கலந்து தண்ணீர் வற்றும்வரை நன்றாக கிண்டவும்.

கேசரி பவுடர், சீனியை சேர்த்து 2 நிமிடங்கள் கிண்டவும்.

நெய் மேலே தெளிந்து வரும்போது வறுத்து வைத்த முந்திரி, காய்ந்த திராட்சை, ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். ஒரு நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: