கேரமல் ப்ரெட் புட்டிங்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் துண்டுகள் - 6 அல்லது 8

பால் - 1 1/2 கப்

வெனிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - 15 தேக்கரண்டி + 6 தேக்கரண்டி

செய்முறை:

ப்ரெட்டை சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.

அதில் பால் விட்டு ஊற விட்டு 15 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து பிசைந்து வைக்கவும்.

கடைசியாக வெனிலா எஸன்ஸ் சேர்க்கவும். பதம் கெட்டியாகவும் இல்லாமல், நீர்க்கவும் இல்லாமல் இருக்க வேண்டும்.

6 தேக்கரண்டி சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு கலந்து கொண்டே இருக்கவும். ப்ரவுன் கலரில் கேரமல் தயாரானதும் அதை குக்கரில் வைக்க போகும் பாத்திரத்தில் ஊற்றவும்.

அதில் ப்ரெட் பால் கலவையை ஊற்றி மேலே அலுமினியம் ஃபாயில் போட்டு மூடவும். ஸ்டீம் வெளியேற அதில் ஓட்டைகள் இட்டு வைக்கவும். குக்கரில் நீர் விட்டு இதை வைத்து மூடி விசில் இல்லாமல் வேக விடவும்.

15 - 20 நிமிடங்களில் வெந்திருக்கும். கத்தியை உள்ளே விட்டு எடுத்தால் ஒட்டாமல் வரும் போது எடுக்கலாம்.

குறிப்புகள்:

பாலின் அளவு ப்ரெட்டை பொருத்து கூடவோ குறையவோ செய்யும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த ப்ரெட் என்றால் சற்று கூடுதலாகவே பாலை இழுத்துவிடும்.

பால் சர்க்கரைக்கு பதில் கன்டண்ஸ்டு மில்க் கலந்தும் இதே போல் செய்யலாம்.