கேரட் பாயசம்
0
தேவையான பொருட்கள்:
கேரட் - 1/4 கிலோ
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 2 கப்
முந்திரி பருப்பு - 10
ஏலக்காய் - 3
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து, தனியாக வைக்கவும்.
அதே நெய்யில் கேரட்டை தோல்சீவி, துருவி, சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
கேரட்டை குக்கரில் 2 விசில் வரும்வரை வேக விடவும்.
இன்னொரு பாத்திரத்தில் பால் கொதிக்கவிட்டு பாதியாக சுண்டிய பிறகு வெந்த கேரட் சேர்க்கவும்.
கேரட், பால் சேர்த்து நன்கு கொதித்ததும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும். எல்லாம் சேர்த்து நன்கு கொதித்ததும் கீழே இறக்கி, ஏலப்பொடி தூவி, வறுத்த முந்திரி சேர்க்கவும்.