கேரட் தேங்காய் கேக்
2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கேரட் - 1/4 கிலோ
தேங்காய் துருவல் - 2 கப்
முந்திரி - 50 கிராம்
பாதாம் - 50 கிராம்
நெய் - 2 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - அரைத்த விழுதைப்போல் ஒன்றரை மடங்கு
விருப்பமான கலர்ப் பொடி - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
கேரட்டைத் தோல் சீவி நறுக்கி பாலுடன் சேர்த்து வேக விடவும்.
வேக வைத்த கேரட்(பாலுடன்), முந்திரி, பாதாம், தேங்காய்த் துருவல், எல்லாவற்றையும் அரைக்கவும்.
அடி கனமான வாணலியில் அரைத்த விழுது, சர்க்கரை, நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
சுருள, ஒட்டாமல் வந்ததும் பாலில் கரைத்த கலர்ப் பொடியை சேர்த்துக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் வில்லை போடவும்.