கேரட் கேசரி (குழந்தைகளுக்கு)
0
தேவையான பொருட்கள்:
கேரட் மீடியம் சைஸ் - 1
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் அல்லது பட்டர் - 1/4 கப்
குங்குமப்பூ - இரண்டு பின்ச்
பாதாம், முந்திரி தூள் - 2 மேசைக்கரண்டி
வெந்நீர் - 1 1/4 கப்
செய்முறை:
பாதி நெய் ஊற்றி உருக்கி கேரட்டை போட்டு நன்கு வதக்கவும்.
அதிலேயே ரவையை கொட்டி கிளறவும். பக்கத்தில் தண்ணீர் ஒன்னேகால் கப் என்பது இரண்டு கப்பாகவே கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.
சர்க்கரை, முந்திரி, பாதாம் கலவை கொட்டி கிளறி வெந்நீரும் ஊற்றி கை விடாமல் கிளறவும். ரொம்ப கெட்டி ஆனால் சிறிது வெந்நீர் ஊற்றி கிளறி மீதி நெய்யையும் குங்குமப்பூவையும் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.