கேரட் அல்வா (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய கேரட் - 1/4 கிலோ

சர்க்கரை - 200 கிராம்

பால் - 1/2 லிட்டர்

நெய் - 3 மேசைக்கரண்டி

முந்திரி - 10 அல்லது 15

கிஸ்மிஸ் - 2 தேக்கரண்டி

ஏலப்பொடி - 1 பின்ச்

குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும். 1 டீஸ்பூன் நெய்யை வாணலியில் விட்டு கேரட் துருவலை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் பாலை பாதியாக குறுகும் வரை காய்ச்சவும். வதக்கிய கேரட்டில் பாலை சேர்த்துக் கிளறவும். ஓரளவு பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.

சிறிது, சிறிதாக நெய் விட்டுக்கிளறவும். ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்துக்கிளறவும்.

அல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ், முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: