கேரட்டு லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரட் - 150 கிராம்

கடலைமாவு - 150 கிராம்

முந்திரிப்பருப்பு - 8

சீனி - 400 கிராம்

டால்டா - 300 கிராம்

ஏலக்காய் - 3

செய்முறை:

காரட்டை தோல் சீவி துருவிக் கொள்ள வேண்டும்.

துருவிய காரட்டை 3 தேக்கரண்டி டால்டா விட்டு வதக்கிப் பின் சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

வெந்தபின் மிக்ஸியில் இட்டு நன்கு மசிக்க வேண்டும்.

மசித்த காரட்டையும், கடலைமாவையும் தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் டால்டா ஊற்றி காய்ந்ததும், கரைத்து வைத்த மாவை பூந்தி கரண்டியில் (சாரணியில்) தோய்த்து, பூந்திகளை எண்ணெய்யில் பொரித்து, சிவந்துவிடாமல் எடுக்கவும்.

சீனியை அரை கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.

பாகு கப்பில் பதத்தில் வந்ததும், பூந்தியை பாகில் கொட்டி நன்கு கிளறி லேசாக மசித்து விட்டு, ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பை டால்டாவில் வறுத்து போட்டு லட்டு (உருண்டை) பிடித்து பரிமாறவும்.

குறிப்புகள்: