குலாப் ஜாமூன் (2)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் பௌடர் - 2 1/2 கப்

நெய் அல்லது டால்டா - 2 மேசைக்கரண்டி

சர்க்கரை - 5 கப்

பேக்கிங் பௌடர் - 1 தேக்கரண்டி (மீடியம்)

மைதா - 2 மேசைக்கரண்டி

நெய் அல்லது எண்ணெய் (பொரிப்பதற்கு) - 1/2 கப்

பால் - கலப்பதற்கு

செய்முறை:

சர்க்கரை விடுத்து மற்ற அனைத்து சாமான்களை பாலுடன் சேர்த்து பிசையவும்.

சிறு உருண்டைகளாக உருட்டி, அதை நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பொரிக்கும் பொழுது, உருண்டைகள் டார்க் பிரௌன் நிறம் ஆகும் வரை காத்திருந்து பிறகு எடுக்கவும்.

5 கப் சர்க்கரையை 5 கப் தண்ணீரில் கரைத்து 1 கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.

ஜாமூன் உருண்டைகளை பொரித்தவுடனே பாகில் போடவும்.

எல்லா உருண்டைகளையும் போட்ட பிறகு, 5 நிமிடம் கழித்து பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும்.

குறைந்தது 3 - 4 மணி நேரம் குலாப் ஜாமூன் ஊற வேண்டும்.

குறிப்புகள்: