கிட்ஸ் ஸ்வீட் கச்சோரி
தேவையான பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 6
தேங்காய் துருவல் - 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலுடன் சர்க்கரையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டும் கலந்து கெட்டியாகும் வரை கிளறவும்.
முழு ப்ரெட் துண்டுகளை குறுக்காக வெட்டி ஒவ்வொரு துண்டுகளையும் நீரில் நனைக்கவும்.
நனைத்த ப்ரெட் துண்டுகளை நன்றாக பிழிந்து விட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
பிழிந்து வைத்திருக்கும் ப்ரெட்டின் நடுவில் சிறு குழிவு இருக்குமாறு தட்டிக் கொள்ளவும். அதில் தேங்காய், சீனிக்கலவையை வைத்து ஓரங்களை மடித்து, கலவை வெளியே வராதவாறு கவனமாக மூடி லேசாக அழுத்தி தட்டி வைக்கவும். பிழிந்து வைத்த எல்லாப் ப்ரெட் துண்டுகளையும் இதுப்போல் செய்து வைக்கவும்.
ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேறியதும் தட்டி வைத்த ப்ரெட் துண்டுகளை போட்டு பொரிக்கவும். இருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.