கிட்ஸ் நூடுல்ஸ் அப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

வேகவைத்த நூடுல்ஸ் - 1 கப்

சீனி - 1 கப்

சிறிதாக நறுக்கிய பாதாம் - 2 மேசைக்கரண்டி

உலர் திராட்சை - 2 மேசைக்கரண்டி

தேங்காய்பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடி - 1 மேசைக்கரண்டி

தயிர் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மேல் குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் நன்றாக பிசைந்து (தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து) கெட்டியான கலவையாக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு சிறு வடிவத்தில் எண்ணெயில் போட்டு பொரித்து பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: