காரமெல் கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 3/4 கப்

பால் - 2 கப்

ரவை - 1 கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

முந்திரி - 5

உலர்ந்த திராட்சை - 5

ஏலக்காய் - 2

செய்முறை:

முதலில் முந்திரி மற்றும் திராட்சையை 1 தேக்கரண்டி நெய் ஊற்றி வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின் அதே கடாயில் ரவையை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

ஏலக்காயை தட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சவும்.

ஒரு கடாயில் சர்க்கரை போட்டு வறுக்கவும். சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து தேன் கலர் போல ஆகும் வரை வறுக்கவும்.

சர்க்கரை அந்த நிறம் வந்த பிறகு அதில் காய்ச்சி வைத்துள்ள சூடான பாலினை ஊற்றவும்.

அதன் பின் அதில் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி மீதம் உள்ள நெய் சேர்த்து வேக விடவும்.

கடைசியில் ஏலக்காய், வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சை சேர்க்கவும்.

குறிப்புகள்: