காரட் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரட் - 1 பெரியது

பால் - 1/4 லிட்டர்

சர்க்கரை - 1/2 டம்ளர்

ஏலக்காய் - 2

முந்திரி - 5

நெய் - 2 தேக்கர

செய்முறை:

காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும் (சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோஅவனில் 5 நிமிடம் வைத்தும் வேக வைக்கலாம்).

நெய்யில் முந்திரி வறுத்து எடுத்துக் கொண்டு, அரைத்த விழுது சேர்த்து வதக்கி பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

வறுத்த முந்திரி, தூளாக்கிய ஏலக்காய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: