காரட் பாதாம் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாதாம் - 40

முந்திரி - 25

காரட் - பெரிதாக ஒன்று

சர்க்கரை - 1 கப்

பால் - 1 லிட்டர்

குங்குமப்பூ - 10 இதழ்கள்

ஏலக்காய் - 8

பாதாம், முந்திரி, திராட்சை - மேலே அலங்கரிக்க

செய்முறை:

முதலில் பாயசம் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

பாதாம், முந்திரியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பாலை விட்டு, மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

காரட்டை துருவி சிறிது பாலுடன் சேர்த்து குக்கரில் வேக விடவும். ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்து, பாதாம், முந்திரி விழுதும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

பாலை 3/4 லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும். அதில் அரைத்த விழுது, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடியில் பிடித்துவிடும்.

பாலும், விழுதும் சேர்ந்து கொண்டதும் இறக்கவும். மேலே குங்குமப்பூ இதழ்களை தூவவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.

குளிர வைத்து கப்புகளில் பரிமாறும்போது, மெல்லிதாகச் சீவிய பாதாம், முந்திரி, மற்றும் காய்ந்த திராட்சை சேர்க்கவும்.

குறிப்புகள்: