காரட் அல்வா (3)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

காரட் - 1/4 கிலோ

சீனி - 2 கப்

பால் - 1/4 லிட்டர்

டால்டா - 100 கிராம்

ஏலக்காய் - 4

கிராம்பு - 4

முந்திரிப்பருப்பு - 15

செய்முறை:

முதலில் காரட்டை கழுவி நன்கு சுத்தம் செய்து, காரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.

ஒரு அடிக் கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காரட் துருவலை போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.

கலவை சுண்டி வருகையில் சீனியைப் போட்டு கிளறி விடவும்.

அடுப்பை மிதமாக எரியவிட்டு, கலவையை தொடர்ந்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

அல்வா பதத்தில் வரும்போது டால்டாவை ஊற்றி கிளறவும்.

பிறகு ஏலக்காய், கிராம்பை பொடி செய்து அல்வாவில் தூவவும்.

அல்வா நன்றாக திரண்டு வந்த பின் நெய் அல்லது டால்டாவை ஒரு தட்டில் தடவி கலவையை அதில் கொட்டவும்.

பிறகு அல்வாவின் மீது வறுத்த முந்திரிப்பருப்பை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்புகள்: