காரட் அல்வா
0
தேவையான பொருட்கள்:
துருவிய காரட் - 1/4 கிலோ
நீர் - 1/2 கப்
பால் - 1/2 கப்
சீனி - 5 மேசைக்கரண்டி
கண்டென்ஸ்ட் மில்க் - 1 மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு துண்டுகள் - 1 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை - 1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
துருவிய காரட், நீரை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை மெதுவான தீயில் சமைக்கவும்.
பிறகு பாலைச் சேர்த்து அது சுண்டும் வரை சமைக்கவும்.
அதன் பின் கண்டென்ஸ்ட் மில்க், சீனி சேர்த்து கிளறவும்.
நெய்யில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்துக் கொட்டவும்.
அல்வா திரண்டு, அடியில் பிடிக்காது, ஒட்டாது சுருண்டு வரும்போது இறக்கி பரிமாறவும்.