கான் ஹல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்த அமெரிக்கன் கான் - 1 கப்

பால் - 1/2 கப்

சீனி - 1/4 கப்

தண்ணீர் - 1/4 கப்

நெய் - 50 கிராம்

நறுக்கிய பாதாம் - 10

முந்திரி - 10

பிஸ்தா - கொஞசம்

செய்முறை:

வேக வைத்த கானுடன் 4 ஸ்பூன் பால் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டு வதக்கவும்.

இதோடு அரைத்த கான் கலவையினை சேர்க்கவும்.

குறைவான தணலில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சீனி, தண்ணீர் ஊற்றி கம்பி பாக்காக காய்ச்சி கான் கலவையுடன் சேர்க்கவும்.

மீதி பாலை ஊற்றவும்.

கை விடாமல் கிண்டிக் கொன்டே இருக்கவும்.

சட்டியுடன் கான் ஒட்டாமல் வரும் போது இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: