காஜர் பாதாம் அல்வா
0
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - 4
ஊற வைத்த பாதாம் - 30
நெய் (அ) வெண்ணெய் - 50 கிராம்
வற்றிய பால் (அல்லது) கன்டன்ஸ்ட் மில்க் - 3/4 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரிப்பருப்பு - 8
ஏலப்பொடி - சிறிது
உப்பு - சிட்டிகை
செய்முறை:
துருவிய கேரட்டை சிறிது பால் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக வைத்து, ஆற விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த பாதாமை கன்டன்ஸ்ட் மில்க் சேர்த்து மிக்சியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கேரட், பாதாம் விழுதை ஒரு நாண் - ஸ்டிக் கடாயில் போட்டு கிளறவும்.
விழுதில் ஈரப்பதம் போகும் வரை கிளறவும்.
பின் உப்பு, சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கலவை நன்கு சேர்ந்ததும், வெண்ணெயை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
அல்வா பதம் வந்ததும் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி பரிமாறவும்.