காஃபி கேக்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 250 கிராம்

முட்டை- 4

பொடித்த சீனி - 250 கிராம்

வெண்ணெய் - 250 கிராம்

பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி

இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் - 2 மேசைக்கரண்டி

சூடான நீர் - 5 மேசைக்கரண்டி

காஃபி எஸென்ஸ் - 2 தேக்கரண்டி

செய்முறை:

காஃபி பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலந்து ஆற வைக்கவும்.

மைதாவையும் பேக்கிங் பெளடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.

மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.

பின் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.

மைதா கலவையையும் காஃபி கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே அடிக்கவும் அல்லது ஒரு ஸ்பாட்டுலாவால் நன்கு கலக்கவும். இறுதியாக எஸென்ஸைக் கலக்கவும்.

160 டிகிரி C-யில் 25 -35 நிமிடங்கள் பேக் செய்யவும். ஆறியதும் துண்டுகள் செய்யவும்.

குறிப்புகள்: