கஸ்டர்ட் ரசமலாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 1 1/2 லிட்டர்

கஸ்டர்ட் - 4 தேக்கரண்டி (வெந்நிலா ப்ளேவர்)

சீனி - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி

வினிகர் - 2 தேக்கரண்டி (அல்லது எலுமிச்சை 1/2 மூடி)

முந்திரி - 10

பாதாம் - 5 (முதல் நாள் இரவே ஊற வைக்கவும்)

தேங்காய் - ஒரு சில்லு (மெல்லியதாக நறுக்கியது)

செய்முறை:

1 லிட்டர் பாலை தண்ணீர் விடாமல் காய்ச்சவும்.

சுண்டியதும் வினிகரை விட்டு திரிய விடவும்.

திரிந்த பாலை வடிகட்டி நீரில்லாமல் கட்டியாக எடுக்கவும்.

அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்கு பிசையவும் (பூரிமாவு போல்)

பின்னர் உருண்டைகளாக எடுத்து தட்டிக்கொள்ளவும்.

1/2 லிட்டர் பாலை தனியாக சீனி,ஏலப்பொடி விட்டு காய்ச்சவும்.

குளிர்ந்த பாலில் கலக்கிய கஸ்டர்டை பாலில் போட்டு அடியில் பிடிக்காமல் கிண்டவும்.

பின்னர் தட்டிய பனீரை சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.

நறுக்கிய முந்திரி,பாதம், தேங்காய் சேர்க்கவும்.

5 முதல் 10 நிமிடங்கள் வைத்து பின்னர் இறக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின் பரிமாறவும்.

குறிப்புகள்: