கல்கண்டு பொங்கல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 டம்ளர்

கல்கண்டு தூள் - 2 டம்ளர்

பால் - 1 டம்ளர்

தேங்காய் துருவல் - 1 மூடி

ஏலக்காய் - 3

முந்திரி - 10

பாதாம் - 5

உப்பு - 1 சிட்டிகை

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை குழைய வேக வைக்கவும். (குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு எடுக்கலாம்).

ஒரு பெரிய பாத்திரத்தில் பால், கல்கண்டு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்ததும் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.

துருவிய தேங்காய், ஏலக்காய்தூள், உப்பு சேர்க்கவும்.

நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்து, நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் சாதத்தில் கொட்டி, நன்கு கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: