கருப்பட்டி பணியாரம் (2)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 400 கிராம்
கருப்பட்டி - 400 கிராம்
செய்முறை:
அரிசியை ஊறவைத்து மிஷினில் (அ) மிக்ஸியில் போட்டு மாவாக்கிக்கொள்ளலாம். ரவையை சல்லடையில் சலித்துக்கொள்ள வேண்டும். கருப்பட்டியை தூளாக்கி சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
மண் இல்லாமல் வடிகட்டி மாவில் ஊற்றி கலக்கி, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பணியாரமாக ஊற்ற வேண்டும்.
சிறுதீயில் வேகவிட்டு திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறவும்.