கருப்பட்டி பணியாரம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பொடி செய்த கருப்பட்டி - 1/2 கப்
வாழைப்பழம் - 1
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
பச்சரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் வாழைப்பழம், கருப்பட்டிப் பொடி மற்றும் உப்புச் சேர்த்து கலந்து வைக்கவும்.
இந்த மாவுக் கலவை தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயின் நடுவில் ஊற்ற வேண்டும்.
மெதுவாக ஓரங்களில் வெந்து மேலே எழும்பியதும் பூரி போன்று உப்பலாகி வரும்.
உப்பலாக வந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு, வெந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுத்து பரிமாறவும்.
ஓரங்களில் மொறுமொறுப்பாகவும், நடுவில் மென்மையாகவும் இருக்கும்.
குறிப்புகள்:
வாழைப்பழம் சேர்ப்பதால் இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.
மாவு கலவை மிகவும் நீர்க்க இருந்தால் அதிகமாக எண்ணெயைக் குடிக்கும்.