கமர்கட் மிட்டாய்
0
தேவையான பொருட்கள்:
பொடியாக துருவியது அல்லது கட் செய்த வெல்லம் - 1 கப்
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
நசுக்கிய ஏலக்காய் - 1
செய்முறை:
வெல்லத்தை சுடு தண்ணீரில் ஒரு கையளவு தெளித்து வெல்லம் கரையும் அளவு சூடு பண்ணவும்.
பின் அதை வடி கட்டி மீண்டும் கம்பி பதத்திற்கு முன் ஏலக்காயை போட்டு அடுப்பை நிறுத்தி பின் பொட்டுக்கடலை போட்டு நன்றாக கிளறவும்.
ஒரு பெரிய தட்டில் எண்ணைய் தடவி அதில் இந்த வெல்லப்பாகை ஊற்றவும்.
ஒரு நிமிடத்திற்குப் பின் சூட்டுடனே வெல்லத்தை பிய்த்தெடுத்து உருண்டையாகவோ, இல்லை தட்டியோ வைக்கலாம்.