கடல் பாசி பாயசம்
தேவையான பொருட்கள்:
கடல் பாசி - 1 கப்
பால் - 500 மில்லி
சீனி - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய நட்ஸ் - 1 தேக்கரண்டி
பொடி செய்த ஏலக்காய் - 1/4 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
குங்குமப் பூ - ஒரு சிட்டிகை
செய்முறை:
பாலுடன் ஏலக்காய்ப் பொடி மற்றும் குங்குமப் பூ சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
கடல் பாசியுடன் 2 கப் வெந்நீர் சேர்த்து மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் வைத்தெடுத்து ஆறவிடவும்.
ஆறியதும் சிறிய கத்தி அல்லது ஃபோர்க் கொண்டு நன்கு கிளறிவிட்டு, கடல் பாசியை உதிர்த்துக் கொள்ளவும்.
கொதிக்க வைத்த பாலுடன் உதிர்த்த கடல் பாசி மற்றும் சீனி சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
அத்துடன் நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதே முறையில் கடல் பாசி சேர்க்காமல் நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.
பாலுக்குப் பதிலாக கன்டண்ஸ்ட் மில்க் சேர்த்தும் செய்யலாம்.