கடலை மாவு லட்டு
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
புதிய கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 3/4 கப் ( அளந்த பின் பொடிக்கவும்)
நெய் - 1/2 கப் அளந்து விட்டு 2 தேக்கரண்டி எடுத்து விடவும்.
செய்முறை:
உருக்கின நெய்யைக் கடலைமாவுடன் கட்டியில்லாமல் கலக்கவும்.
வாணலியில் வைத்து, சிறிய அடுப்பில் கைவிடாமல் கிளறவும்.
விரைவில் பொரபொரவென்று ஆகும்.
உடனே கீழே இறக்கி பொடிசெய்த சர்க்கரையைக்கொட்டிக் கிளறவும்.
இறுக ஆரம்பித்ததும், சூடு தணியு முன்னரே உலட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
தேவையானால், பொடியாக நறுக்கின முந்திரிப் பருப்புகள் கலந்து கொள்ளலாம்.