கடலை உருண்டை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்த கடலை - 2 கப்

தேங்காய் துருவல் - 3/4 கப்

வெல்லம் - சுமார் 50 கிராம்

செய்முறை:

வறுத்த கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

வெல்லத்தில் 4 தேக்கரண்டி தண்ணீர் விட்டு உருக்கவும்.

வெல்லம் உருகினால் போதுமானது. அதிகமாக கொதிக்க விட்டு கம்பி பாகானால் உருண்டையும் கெட்டியாகும்.

உருக்கின வெல்லத்தையும், தேங்காயையும் பொடித்த கடலையுடன் சூடாக சேர்த்து உருண்டைகளாக்கவும்.

குறிப்புகள்: