கடலைமாவு பாயசம்
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 50 கிராம்
வெல்லம் - 100 கிராம்
முந்திரி - 5
ஏலக்காய் - 2
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
நெய்யை சூடாக்கி, முந்திரியை வறுத்து எடுத்துக்கொண்டு, கடலை மாவை அதில் போட்டு, நன்கு சிவக்க வறுக்கவும்.
வெல்லத்தை தூள் செய்து, 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி வறுத்த மாவில் சேர்த்து கரைக்கவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி பரிமாறவும்.(தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கலாம்).