கடலைப்பருப்பு லட்டு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கிலோ

வெல்லம் - 1/2 கிலோ

நெய் - 50 கிராம்

முந்திரிப்பருப்பு - 10

தேங்காய் - அரை மூடி

பச்சை கற்பூரம் - 2

ஏலப்பொடி - சிறிதளவு

செய்முறை:

கடலைப் பருப்பை ஊற வைத்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி தேங்காய் துருவலுடன் போட்டு நெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும்.

அகலமான பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்த பருப்பு விழுதை போட்டு கரண்டியால் நன்றாக கிளறவும்.

நன்றாக வெந்ததும், வெல்லம், தேங்காய் துருவல் முந்திரி கலவைகளை கொட்டி கிளறி இறக்க வேண்டும்.

இறக்கியதும் ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் போட்டு கலந்து கைபிடிக்கும் அளவு உருண்டை பிடித்து லட்டை பரிமாறவும்.

குறிப்புகள்: