கடலைப்பருப்பு பாயாசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்

துருவிய தேங்காய் - ஒரு மூடி

வெல்லம் - 2 கப்

முந்திரிப்பருப்பு - 12

நெய் - தேவையான அளவு

பால் - அரை லிட்டர்

செய்முறை:

கடலைப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

பருப்பு ஆறியவுடன் துருவிய தேங்காய், சிறிதளவு முந்திரி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். வெல்லம் நன்கு கரைந்தவுடன் அரைத்த விழுது, நெய் விட்டு கிளறவும்.

நன்கு கெட்டியானவுடன், காய்ச்சிய பால், ஏலக்காய்ப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: