கசகசா அல்வா (1)
0
தேவையான பொருட்கள்:
கசகசா - 100 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
பாதாம் பருப்பு - 6
நெய் - 100 கிராம்
செய்முறை:
கசகசாவை கல்,மண் நீக்கி 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய கசகசாவை வடித்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
(எந்த அளவிற்கு நைசாக அரைக்கிறாமோ அந்த அளவிற்கு நன்றாக சுவையாக இருக்கும்.)
வாணலியில் நெய்யை ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு கை விடாமல் கிளறவும்.
நன்கு பொன்னிறமானதும் சர்க்கரையை போட்டு கிளறவும்.
நன்கு கிளறி கிளறி நெய் பிரிய ஆரம்பிக்கும்.
நன்கு சுருண்டு வரும் பொழுது கீழே இறக்கி விடலாம்.
பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரித்து நீள, நீளமாக நறுக்கி அல்வாவின் மேல் அலங்கரிக்கவும்.