ஓட்ஸ் பாயசம் (1)
0
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
பால் - 1/2 லிட்டர்
சீனி - 3/4 கப்
மில்க்மெய்டு (கன்டென்ஸ்டு மில்க்) - 1/4 கப்
வறுத்த முந்திரி - 10
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் போட்டு 30 நொடி வறுக்கவும்.
அதில் கால் கப் பால் ஊற்றி பிரட்டிவிடவும். மீண்டும் கால் கப் பால் ஊற்றி சுமார் 4 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
பிறகு சீனியை போட்டு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து மில்க்மெய்டை ஊற்றி கிளறவும்.
குங்குமப்பூவை அரை மேசைக்கரண்டி பாலில் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்.
மீதம் உள்ள பாலை ஊற்றி அதில் ஏலக்காய் பொடி, முந்திரி போட்டு கிளறி விடவும். இறுதியில் குங்குமப்பூ கரைசலை ஊற்றி கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.