ஓட்ஸ் பாயசம்
0
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/2 கப்
பால் - 4 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
கோவா - 2 மேசைக்கரண்டி
பாதாம் - 5
முந்திரி பருப்பு - 5
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
பாலை ஒருகப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். அதில் ஓட்ஸை சேர்த்து நன்கு வேக விடவும்.
அத்துடன், கோவா,சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பாதாமை வென்னீரில் போட்டு தோல் நீக்கி, பாதாம், முந்திரியை மெல்லியதாக சீவி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.