ஒப்புட்டு (போளி)
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
தேங்காய் துறுவல் - 1/4 கப்
மைதா மாவு - 1 கப்
ஏலக்காய் - 3
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணை - தேவையான அளவு
செய்முறை:
கடலைபருப்பை வேகவைக்கவும். வெந்தபருப்புடன், வெல்லம், தேங்காய்துறுவல், ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் நெய் விட்டுபருப்பை போட்டு கிளறி இறக்கவும்.ஆறியவுடன் சிறு உருண்டைகளாக பிடித்துவைக்கவும்.
மைதாவில் தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவுபதம் கரைத்துவைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை காயவைக்கவும்.பருப்பு உருண்டையை மைதாமாவில் முக்கிஎடுத்து தோசைக்கல்லில் வைத்து அடைபோல் தட்டவும்.
ஒரு ஸ்பூன் எண்ணைவிட்டு திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும்.