எள் மிட்டாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்த எள் - 1 கப்

வெல்லம் அல்லது கருபட்டி - 3/4 கப்

வறுத்து தோல் நீக்கி உடைத்த நிலக்கடலை - 1 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

கருபட்டியை சூடான தண்ணீரில் போட்டு ஒரு காய்ச்சு காய்ச்சி வெல்லம் கரைந்தபின் வடிகட்டி பின் பாகு காய்ச்சவும்.

பாகு காய்ச்சும் போது ஏலத்தூளை போடவும்.

அதனுடன் வறுத்த எள், நிலக்கடலையை போட்டு நன்கு கிளறி அதனை நெய் தடவிய தட்டில் கொட்டி உருண்டையும் பிடிக்கலாம் அல்லது துண்டமாகவும் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: