எள்ளுருண்டை (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் - 200 கிராம்

வெல்லம் - 100 கிராம்

செய்முறை:

முதலில் எள்ளைக் களைந்து ஒரு துணியில் பரவலாக விரித்து ஒரு மணி நேரம் காய வைக்கவும்.

ஒரு வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து எள்ளைப் போட்டு வறுக்கவும்.

நன்றாக வறுபட்டு எள் சிவந்து வெடிக்க ஆரம்பித்ததும் இறக்கவும்.

வெல்லத்தை நன்றாகத் தட்டி ஐம்பது மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தொடர்ந்து கிளறி விட்டு பாகு முத்துப் பதத்திற்கு (சிறிது எடுத்து தட்டில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து கையில் எடுத்து உருட்டினால் உருட்ட வரும்) வந்ததும் இறக்கவும்.

எள்ளை சேர்த்துக் கிளறி கை பொறுக்கும் சூடு வந்ததும் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்புகள்:

உருட்டும்போது கையில் ஒட்டாமல் இருக்க சிறிது நெய்யை கையில் தடவிக் கொள்ளவும்.