உளுந்து பால் ஜாமூன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 100 கிராம்

பால் - 250 கிராம்

சர்க்கரை - 250 கிராம்

ஏலக்காய் - 4

வறுத்த முந்திரி - 10

எண்ணெய் - 200 கிராம்

செய்முறை:

உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து வடை மாவு போல அரைத்து கொள்ளவும்.

ஏலக்காயை சிறிது சர்க்கரையுடன் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

பாலை நன்கு காய்ச்சி, அதனுடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, சர்க்கரை சேர்க்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன், சிறிய வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து, அதை பாலிலே போட்டு சிறிது நேரம் ஊறவைத்து பின் பரிமாறவும்.

குறிப்புகள்: